Ticker

6/recent/ticker-posts

OMSED மாணவர் அமைப்பின் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் உரையாற்றுகிறார்

ஒம்சட் (OMSED) மாணவர் அமைப்பு , நாளை புதனன்று (06) நடாத்தும் Life Talks நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஆகியவற்றின் தலைவர் சிரேஷ்டஊடகவியலாளர் என்.எம்அமீன் உரையாற்றவுள்ளார்.
OMSED மாணவர் அமைப்பு தொடராக நடாத்தி வரும் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் Life Talks இன் இவ்வருடத்துக்கான முதல் நிகழ்ச்சிநாளை பெப்ரவரி 06 ஆம் திகதிகொழும்புதபால் தலைமையக கேட்போர்கூடத்தில்மாலை 6.45 மணி முதல் 8.45 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினதும்முஸ்லிம் கவுன்ஸிலினதும் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்அமீன் உரையாற்றவுள்ளார்நிகழ்வுக்கு BCAS கல்வி நிறுவனதலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் 2018 ரமழான் மாதம் OMSED அமைப்பு நடாத்திய ரமழான் போட்டி நிகழ்சசியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments