(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மூதூர் ஆலிம் நகர், ஜின்னா நகர் ஜும்ஆப் பள்ளியை மையப்படுத்தி, கிராமத்தில் கல்வி ரீதியான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள அல் - மதார் பாலர் பாடசாலையின் 2019ஆம் ஆண்டுக்கான முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எச்.எம். ஹாரிஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகள், பெற்றோர்கள், பொதுமக் கள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனா்.

0 Comments