Ticker

6/recent/ticker-posts

நியூசிலாந் மஸ்ஜித் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்து 48பேர் காயமடைந்துள்ளனர்

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் பள்ளிவாசல்கள் இரண்டின் மீது  இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் நியூஸிலாந்திற்கு இது ஒரு இருண்ட நாள் என தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து ஊடகங்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இது ஒரு கொடூரமான வன்முறை; பல உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் நியூசிலாந்து பிரஜை ஆவார்.  இது ஒரு தீவிர வலதுசாரி வன்முறை என  குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தும், 48 பேர் காயமடைந்தும் உள்ளதாக நியூஸிலாந்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments