Ticker

6/recent/ticker-posts

ஐநா மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம் அளிக்க செல்லவிருந்தோருக்கு விசா மறுப்பு?

ஐநா மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம் அளிக்க செல்ல திட்டமிட்டிருந்த பலரது விசா விண்ணப்பங்களை சுவிஸ் தூதரகம் நிராகரித்துள்ளதாக அறிய வருகிறது.

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலுமிருந்தும் விண்ணப்பித்த பலரது விண்ணப்பங்களே கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த பலர் இம்முறை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சாட்சியமளிக்க செல்லவிருந்தனர். அவர்களது விசாவிற்கான விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.
எனினும் கொழும்பை மையப்படுத்திய  சிங்கள அமைப்புக்களிற்கு கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் எந்த மறுப்பும் இல்லாமல் விசா வழங்கியுள்ளதாகவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
.

Post a Comment

0 Comments