Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையே யுத்தம் நிலவுகிறது: ராகுல் காந்தி

நாட்டில் இரு கொள்கைகளுக்கு இடையில் யுத்தம் நிலவுகிறது என, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) முதன்முறையாக தமிழகம் சென்றுள்ளார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளிடையில் ராகுல் காந்தி உரையாடினார். உரையாடுவதற்கு முன்னதாக மாணவிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "தற்சமயம் இந்தியாவில் இரு கொள்கைகளுக்கு இடையே யுத்தம் நடைபெறுகிறது. அதில், ஒன்று, மக்களை ஒன்றிணைக்கும் கொள்கை. நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும், எந்தவொரு கொள்கையும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்ற கொள்கை.
மற்றொரு கொள்கை, தற்போதைய பாஜக அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியால் வழிநடத்தப்படுவது. நாட்டின் பல்வேறு மதம், மொழிகளைக் கைவிட்டு, ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் மக்களைப் பிரித்தாள்வது. அதற்கு எதிராக நாம் போராடுகிறோம். மோடி ஆட்சியில் உச்ச நீதிமன்றம், சிபிஐ என தன்னாட்சி அமைப்புகள் சிதைக்கப்பட்டு விட்டன"
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Post a Comment

0 Comments