Ticker

6/recent/ticker-posts

ஆனமடுவில் தீவைக்கப்பட்ட ஆட்டோவும் 2 மோட்டார் பைக்குகளும் !

இன்று(30.08.2019) வெள்ளி அதிகாலை 3 மணியளவில் புத்தளம், ஆனமடு, சங்கட்டிக்குளத்தில் முச்சக்கர  ஒன்றும் மோட்டார் பைக் இரண்டும் இனம்தெரியாதோரால் தீக்கிரையாக்க பட்டுள்ளது.


ஆனமடு சங்கட்டிக்குளத்தை சேர்ந்த K.M.நியாஸ் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ ஒன்றும் 2 மோட்டார் பைக்குகளுமே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னரும் இதே பகுதியில் முஸ்லிம் நபர்களுக்கு சொந்தமான ஆட்டோக்கள் பல தடவைகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் பொலிஸ் மற்றும் பள்ளிவாசல்களினூடாக பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இதுபோன்ற  சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(அல் மசூரா நிவ்ஸ்)

Post a Comment

0 Comments