நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட 5 பேர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வியாழேந்திரனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு மட்டக்களப்பு சீயொன் தேவாலயம் மீது தாக்குதல் தொடுத்த பயங்கரவாதியின் உடல் பாகங்களை மட்டக்களப்பு, கல்வியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதை எதிா்த்து ஆா்ப்பபட்டம் இடம்பெற்றது.
புதைக்கப்பட்ட உடற்பாகத்தை அகற்றுமாறு கோரி பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக அப்பாவி பொதுமக்கள் பலரும் காயங்களுக்கு உள்ளாகினர். போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments