நேற்று 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 15, மட்டக்குளிய விஸ்ட்வைக் வீதியில் வசிக்கும் ஜனாப் ஹிஸ்னி என்பவரின் மாமியாரின் ஜனாசா., நல்லடக்கத்திற்காக மாதம்பிட்டிய மையவாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அப்போது அந்த பள்ளிவாசலில் தப்லீக் ஜமாஅத்துடைய மஷூரா நடைபெறுவதாக கூறி பள்ளிவாசலுக்குள் மைய்யித்துக்கான பர்ளான தொழுகையை நிறைவேற்ற இடமளிக்காது குறித்த ஜமாஅத்தினர் தடுத்திருப்பதாக அறியவருகிறது.
மாறாக பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள பாலர் பாடசாலையில் தொழுகை நடத்துமாறு மேற்படி தப்லீக் ஜமாத்தினர் ஜனாஸா கொண்டு சென்றவா்களை வற்புறுத்தியுள்ளனர்.
மஸ்ஜிதில் ஜனாஸா தொழுகைக்கு இடமளிக்குமாறு எவ்வளவோ எடுத்து சொல்லியும், ஜனாஸா தொழுகை தமது ஜமாஅத்தின் மஷூராவுக்கு இடையூறாக அமையும் என காரணம் காட்டி மேற்படி ஜனாசாவை பள்ளிக்குள் எடுத்துச் செல்வதற்கு குறித்த தப்லீக் ஜமாஅத்தினா் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பாலா் பாடசாலைக் கட்டிடத்திற்குள் தொழுகை நடாத்துவதற்கான எந்த வசதிகளும் இல்லாத நிலையில் ஜனாசாவை வைத்துக்கொண்டு சண்டை பிடிக்க விரும்பாத மைய்யத்து வீட்டார் பாலர் பாடசாலைக்குள்ளேயே ஜனாசாவுக்கான தொழுகையை நடத்திவிட்டு அடக்கம் செய்துள்ளனா்.

0 Comments