Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கு சீனா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி!

இலங்கை அரசாங்கத்திற்கு  சீன அபிவிருத்தி வங்கி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று அலரி மாளிகையில் இதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இலங்கை அரசு சார்பாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் சீன அபிவிருத்தி வங்கியின் சார்பில் அதன் துணை இயக்குநர் ஜெனரல் திரு வாங் வீ (Mr. Wang Wei) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நாட்டின் அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இலங்கை அரசு சீன அரசிடமும் மற்றும் சீன அபிவிருத்தி வங்கியிடமும் விடுத்திருந்த  வேண்டுகோளின் பேரில்  இந்த கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வார தொடக்கத்தில் இந்த சீன கடன்தொகையான  500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 

Post a Comment

0 Comments