Ticker

6/recent/ticker-posts

முஜீபுர் றஹ்மான் சஜித் அணியில் தொலைபேசி சின்னத்தில் போட்டி!

எதிர்வரும் பொதுத் தோ்தலில் முஜீபுர் றஹ்மான் கொழும்பு மாவட்டத்தில் சஜித் அணியில், சமகி ஜனபலவேகய கட்சியின்  தொலைபேசி சின்னத்தில்  போட்டியிடுகின்றார்.

தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரத்தில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று மாலை சமகிஜனபலவேகய தலைமையகத்தில் இடம்பெற்றது,

கடந்த 2015 பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்   ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு 83,000 வாக்குகளைப் பெற்ற முஜீபுர் றஹ்மான், இம்முறை சஜித் அணியில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments