Ticker

6/recent/ticker-posts

கலென்பிந்துனுவெவ, ஹோரொவபதான மற்றும் கஹடகஸ்திகிலிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

கலென்பிந்துனுவெவ, ஹோரொவபதான மற்றும் கஹடகஸ்திகிலிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

கலென்பிந்துனுவெவ, ஹோரொவபதான மற்றும் கஹடகஸ்திகிலிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அக்குரனை பகுதியில் கொரோனா  தொற்றுக்குள்ளானவரோடு தொடர்புபட்டவர்கள்  இந்த பகுதியில் வாழ்பவர்களோடு தொடர்பு பட்டிருந்ததன்  விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்..

கலென்பிந்துனுவெவ, ஹோரொவபதான மற்றும் கஹடகஸ்திகிலிய ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் சுமார் ஒரு லட்சம்  (100,000) குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்த மூன்று பகுதிகளிலும், நாளாந்தம் கிருமி தொற்று நீக்கம் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகள் வீடுகளுக்கே வந்து  வழங்ப்படும் என்றும் இந்த பகுதியிலிருந்து  நகரத்திற்கு யாரும் வர வேண்டாம் என்று பொலிஸார்   அறிவித்தள்ளனர்..

Post a Comment

0 Comments