Ticker

6/recent/ticker-posts

கொழும்பு, கம்பஹா, களுத்துறை : இனி ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இனி ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாக இவை  அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்று (24) காலை 6 மணிக்கு விலக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் மீள 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட போதிலும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில்  தொடர்ந்து இருக்கும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுவீடாக சென்று விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள்தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக எவ்வித கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் கடைகள், வர்த்தக நிலையங்களில்   கூடிவருவதால் வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக  அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. 
கடைகள் வர்த்தக நிலையங்களுக்கு  அருகே ஏராளமான மக்கள் கூடிவருவது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும்  தடையாக இருப்பதை சுகாதாரத்துறை  அதிகாரிகள் அவதானித்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனால் அத்தியாவசிய  பொருட்களை வீடுகளுக்கே  கொண்டு வந்து கொடுக்கும்  புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. CWE சதொச, Keells, LAUGFS, Arpico, Food City, Araliya, Nipuna மற்றும் பிற மொத்த நிறுவனங்கள் இந்த முயற்சியில் பங்கேற்கின்றன.
இந்த பணியை திறம்பட நிறைவேற்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments