Ticker

6/recent/ticker-posts

கொரோனாவில் மரணித்தவரின் இறுதிச் சடங்கு சர்வதேச தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இடம்பெறும்

கொரோனாவில் மரணித்தவரின் இறுதிச் சடங்கு சர்வதேச தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இடம்பெறும்

இலங்கையில் கொரோனாவினால்  மரணித்தவரின் இறுதிச் சடங்குகள் சர்வதேச தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இடம்பெறும்  என்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தொிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் (QUARANTINE AND PREVENTION OF DISEASES ORDINANCE) 1897ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ம் திகதி  இலங்கையில் முதன்முதலாக நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தின் படி இறந்தவரின் உடலம் வீடுகளுக்கு வழங்கப்படாமல் நேரடியாக மயானங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு  எட்டு அடி ஆழமான குழிகளில் புதைக்கபடும் அல்லது எரியூட்டப்படும்  என்று அறிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணித்த முதலாவது   நபர் கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் நேற்று இறந்தார். இலங்கையில் கொரோனாவினால் மரணித்த முதலாவது நபராக இவர் பதிவாகியுள்ளார்.

இவர் புத்தளம் மாவட்டத்தின்  மாரவில பகுதியில்  வசித்த 60 வயது நபராவார்.  நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments