ஊடகப்பிரிவு -
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாரை மாவட்டத்தில், மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது.
அம்பாரை மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பொருட்டு, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத் (அப்துல் ரஸாக்) ஆகியோர், இன்று (19) அதிகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.
வை.எல்.எஸ்.ஹமீட் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், ஏற்கனவே வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்தவகையில்,
1. சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட்
2. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத் (அப்துல் ரஸாக்)
3. அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி,
4. நிந்தவூர் பிரதே சபை தவிசாளர் ஏ.எம். தாஹிர்,
5. சம்மாந்துறையிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர்,
6. பொத்துவில் ஊடகவியலாளர் சடத்தரணி முஷாரப் முதுநபீன்,
7. அட்டாளைச்சேனை கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர்,
8. இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் மௌலவி ஏ.எல். நௌபர்,
9. மருதமுனை வை.கலீலுர் ரஹ்மான்,
10. முஹம்மது ஹனீபா ஆதம் லெப்பை
ஆகிய 10 பேர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, அம்பாரை மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுகின்றனர்.
0 Comments