Ticker

6/recent/ticker-posts

முழுஉலகையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் நிலையில் இலங்கையில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி எடுத்துவரும் துரித நடவடிக்கைள் பாராட்டு! கிழக்கு முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்

முழுஉலகையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் நிலையில் இலங்கையில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி எடுத்துவரும் துரித நடவடிக்கைள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் சிறப்புக்கும் உரியன. இந்நிலையில் அரசு எடுக்கும் நடவடிக் கைகளுக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டும். குறிப்பாக கிழக்கிலங்கை வாழ் மக்கள் மிகவும் அவதானமாக இக்கால கட்டத்தை எதிர் கொள்ளவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
நாடு இன்று மிகபெரும் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளது. இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் எதுவித பேதங்களும் இன்றி இந்த அச்சுறுத்தலை எதிர் கொள்ளவேண்டும்.அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். குறிப்பாக அவசரகால சட்டம் நடைமுறைப்படுத் தப்படும் நிலையில் அதன் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

இந்த நடைமுறைகள் காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றபோதும் அரசு அதற்கான மாற்றீட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. எனினும் தினம் தமது சம்பாரிப்பை  எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்தும் மக்களும் குடும்ப தலைவர்கள்அற்ற குடும்பத்தினரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு சமூர்த்தி உதவிபெறும் குடும்பத்தினருக்கு கிடைக்கும் நிவாரண உதவிகள் போன்று நிவாரண உதவிகள் கிடைக்க வழி வகைள் செய்யப்பட வேண்டும்.

ஜனாதிபதியும் அரசும் மிகவும் துரிதமாகவும் செம்மையாகவும் பல்வேறு நடவடிக் கைகளை எடுத்துவருகின்றன. இதற்கு அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி கொரோனா அச்சுறுத்தலை எதிர் கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொள்ள விரும்;புகிறேன்.- என்றுள்ளது.

Post a Comment

0 Comments