Ticker

6/recent/ticker-posts

கொரோனாவின் கோரத்தாண்டவம் : 10 மில்லியன் மக்களைத் தாக்கி அரை மில்லியன் மக்களைக் கொன்றுள்ளது!


உலகளாவிய ரீதியில்  கொரோனா வைரஸ் தொற்றுகள் ஞாயிற்றுக்கிழமை (28)  10 மில்லியனை நெருங்கியதாகவும் கடந்த ஏழு மாதங்களில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்களை, அதாவது ஐந்து இலட்சம் மக்களின் உயிர்களை கொரோனா வைரஸ் குடித்துள்ளது என்றும் ரொய்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 25% மக்கள் நோய்த்தொற்றுக்கு  உள்ளானதாகவும், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முறையே 11% மற்றும் 9% வீதமான மக்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முதலாவது கொரோனா நோயாளி  இவ்வருட  ஜனவரி மாதம் 10ம் திகதி   சீனாவில் வுஹான் நகரில் அடையாளம் காணப்பட்டார்.   பிரித்தானியா, இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா என்று பல நாடுகளையும் புரட்டிப் போட்ட கொரோனா சீனாவில் கொரோனா  மரண தொகையை குறைத்திருப்பது பல நாடுகளிடம் சந்தேகத்தையும், கோபத்தையும் கிளறி விட்டிருக்கிறது. 

கொரோனா வைரஸ் தொற்று இப்போது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற  நாடுகளில்  ஒரு நாளைக்கு 10,000 க்கும் மேற்பட்ட  நோயாளிகளை  அடையாளம் காணப்பட்டு வருகின்றனா். 

Post a Comment

0 Comments