Ticker

6/recent/ticker-posts

ட்ரம்பின் பதிவை நீக்கிய ஃபேஸ்புக்

சர்ச்சைக்குரிய குறியீட்டுடன் பிரசார வீடியோவை வெளியிட்ட டிரம்பின் பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அதிபர் டிரம்ப் தீவிரமான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டது தொடர்பாக போராட்டம் வெடித்தபோது, சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இடப்பட்ட 2 மணி நேரத்திலேயே வன்முறையை தூண்டும் பதிவு என அறிவித்து டுவிட்டர் அதனை நீக்கியது. இந்நிலையில், தேர்தலின் ஒரு பகுதியாக பேஸ்புக்கில் பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் சிவப்பு வண்ணத்தில் தலைகீழாக முக்கோணம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அவர் மட்டுமல்லாமல் துணை அதிபர் மைக் பென்ஸ்-ம் அதே முக்கோண குறியீட்டுடன் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. ‛இது வெறுப்புணர்வை தூண்டும் நாஜிகளின் (Nazi) குறியீடு என்பதால் அந்த வீடியோவை நீக்குவதாக' பேஸ்புக் நிர்வாகம் அறிவித்தது.
அதேசமயம் இது வெறுப்புணர்வை தூண்டும் குறியீடு அல்ல என டிரம்பின் பிரசாரக் குழு விளக்கமளித்துள்ளது.


Post a Comment

0 Comments