Ticker

6/recent/ticker-posts

நாளை கொழும்பில் சில பகுதிகளில் நீர் வெட்டு


கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் வழங்கல் நாளை (18) 16 மணி நேரம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அவசர மறுசீரமைப்பு பணிகள் காரணமாக அம்பதல நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கொலொன்னாவ பகுதிக்கு  நீர் வழங்கல் நிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கொலன்னாவ  நகர சபைக்கு உட்பட்ட பகுதி, ராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த  மற்றும் ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வீதிகள் வழியாக நீர் வழங்கல் நிறுத்தப்படும்.

நாளை பிற்பகல் 02.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணி வரை 16 மணி நேரம் நீர்வழங்கல் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments