Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் இறந்த தொழிலாளர்களுக்கு ரூபா ஐந்து இலட்சம் இழப்பீடு


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டில் பணிபுரியும் போது கோவிட் -19 கொரோனா தொற்றால்  இறந்த தொழிலாளர்களுக்கு காப்பீட்டு இழப்பீடு வழங்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் nதாற்றால் இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 40 பேர் மரணித்துள்ளனர், அவர்களில் 37 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்களாவர்.

சவூதி அரேபியாவில் 18 பேரும், குவைத்தில் 9 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 8 பேரும், ஓமான் மற்றும் கத்தார் நாட்டில் தலா இரண்டு பேரும், லெபனானில்  ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டில் பணிபுரியும் போது ஒரு சாதாரண மரணத்திற்கு ரூபா 5 இலட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது. கொரோனா  நோயால் இறக்கும் தொழிலாளர்களுக்கும் இதே தொகை  வழங்கப்படவிருக்கிறது, இதற்காக 20 கோப்புகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments