Ticker

6/recent/ticker-posts

கள்ள நோட்டு அச்சிட்ட பொலிஸ் அதிகாரிகள்!


குற்றப்புலனாய்வுத் துறையால் (சீஐடி) கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள் (Police Narcotics Bureau) 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவர்கள் போதைப்பொருள் கடத்தல், விற்பனை என்பவற்றோடு  கள்ள நாணயத் தாள்களை அச்சிடும் காரியத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
 
இது தொடர்பாக ஏற்கனவே  விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பிரதி சட்டமா அதிபர் திலீப பீரிஸ் கொழும்பு பிரதம நீதவான்  லங்கா ஜெயரத்னவுக்கு தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரிகள் மீது தொடுக்கப்பட்ட  விரிவான விசாரணையைத் தொடர்ந்து,  பல சந்தேக நபர்களிடமிருந்து 31 ஐயாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கு மேலதிகமாக கள்ள நோட்டுகளை அச்சிடுவதில் ஈடுபட்டதாக அறிaவந்திருக்கிறது.

Post a Comment

0 Comments