நேற்று பிற்பகல் நடந்த இந்த சோதனையின்போது 12 மொபைல் போன்கள் மற்றும் 113 பெட்டரிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சோதனையின் போது ஐந்து “சிம் கார்ட்“களும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறைச்சாலை ஓ வார்டில் சிறை புலனாய்வு அதிகாரிகளால். இந்த சோதனை நடத்தப்பட்டது.
கைதிகளுக்கு மொபைல் தொலைபேசிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பெறுவதற்கு ஆதரவளிக்கும் சிறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

0 Comments