Ticker

6/recent/ticker-posts

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு கல் வீச்சு! !


அங்குலான பொலிஸ் நிலையம் முன்பாக  இப்பகுதியில் வசிப்பவர்கள் இன்று (16) போராட்டம் நடத்தியுள்ளனர்.

அங்குலானா பகுதியில் அண்மையில் பொலிஸார் நடாத்திய  துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்ஒருவர் உயிரிழந்தார். பொலிஸாரின் துப்பாக்கி சூடு தொடர்புடைய இரண்டு முக்கிய சாட்சிகள் இருவரை இன்று காலை 5 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் அழைத்து சென்றுள்ளனர்.

முக்கிய இரண்டு சாட்சிகளான இருவரை கல்கிஸ்ஸ மற்றும் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையங்களுக்கும் பின்னர் அங்குலான பொலிஸ்  நிலையத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாக அறிய வருகிறது.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை்கு எதிர்ப்பு தொிவித்து பிரதேச மக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர். 

பொலிஸ் நிலையத்தை நோக்கி போராட்டக் காரர்கள் கல் வீச்சு நடாத்தியதாகவும் அதனை தடுப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் செய்து போராட்டக்காரர்களை கலைத்ததாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments