சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பாிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அதன் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே கூறியுள்ளார். இல்லையென்றால், நிலைமை ஆபத்தானதாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
டொக்டர் ஹரித அலுத்கே நேற்று அரசாங்க மருத்துவர்கள் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நேரத்தில் நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்காலத்தை சிறப்பாக செய்ய முடியும்.
ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் தீர்க்கமானது.
கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பல அறிவுருத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்கினார் என்றும் கூறினார்.

0 Comments