Ticker

6/recent/ticker-posts

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம்: தடுப்புக் காவலில் இருந்த நால்வர் விடுதலை!


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்புக் காவலில் இருந்த நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இவர்களை விடுவிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த
 மொஹமட் மஹ்ரூப்  மொஹமட் ஆதில், மொஹமட் ஜவ்பர் மொஹமட் நளீப், அப்துல் ஸலாம் மொஹமட், மொஹமட் தாஹா மொஹமட் றியாப் ஆகிய நால்வரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும், சஹ்ரானுடனாக தொடர்பு சம்பந்தமாகவும் நீண்ட காலமாக இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் பயங்கரவாதத்துடன், தீவிரவாதத்துடனும் இவர்களுக்குள்ள  தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லையென்று நீதிமன்றுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்ததையடுத்து நீதிமன்றம் இவர்களை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தள்ளது.

Post a Comment

0 Comments