அணு ஆயுத பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான ஒரு சிறப்பு மையத்தை அமைப்பதற்காக சர்வதேச அணுசக்தி நிறுவனத்திற்கு (International Atomic Energy Agency - IAEA) 10 மில்லியன் டொலர் நிதியை சவுதி அரேபியா வழங்கியுள்ளது. சவுதி அரேபியாவுக்கான ஆஸ்திரியாவின் தூதுவர் இளவரசர் அப்துல்லா பின் காலித் பின் சுல்தான் இன்று தெரிவித்ததாக சவுதி கெஸட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி நிறுவனத்திற்கான சவுதி அரசின் ஆளுநராகவும் இருக்கும் இளவரசர் அப்துல்லா பின் காலித் அணுசக்தி நிறுவனத்திற்கு நிதி மாற்றப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
“சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் திறன்களை பூர்த்தி செய்ய சவுதி அரசு $ 10 நன்கொடை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றியுள்ளது. ஒரு சிறப்பு அணுசக்தி பாதுகாப்பு மையத்தை நிறுவுவதற்கு இந்த நிதிவழங்கப்பட்டுள்ளது " என இளவரசர் அப்துல்லா பின் காலித் பின் சுல்தான் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் சவுதி கெஸட் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments