நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்றத்தை பலப்படுத்தும் விதிகள் 21வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
21வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை பலப்படுத்தும் திருத்தத்தை ஆதரிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பிரச்சினை இல்லை எனவும், ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை மக்கள் ஆணையில்லாத பிரதமருக்கு மாற்றுவதை தமது கட்சி எதிர்ப்பதாகவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 Comments