சவூதி அரேபியாவில் ஒரு வார காலத்திற்குள் குடியுரிமை, தொழில் மற்றும் எல்லை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக 16,606 பேரை கைது செய்துள்ளதாக சவுதி அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
செப்டம்பர் 8 முதல் 14 வரை இடம்பெற்ற இந்த நடவடிக்கைகளில், குடியுரிமை விதிகளை மீறியதற்காக மொத்தம் 9,895 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை 4,422 பேர் சட்டவிரோத எல்லைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காகவும், 2,289 பேர் தொழிலாளர் தொடர்பான சட்டங்களை மீறியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, சட்டவிரோதமாக சவுதி நாட்டுக்குள் நுழைய முயன்றதற்காக 362 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் 19 பேர் அண்டை நாடுகளுக்கு கடக்க முயன்றதாக பிடிபட்டுள்ளனர், 18 பேர் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை ஏற்றிச் சென்று அடைக்கலம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுதி நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு உதவுதல், போக்குவரத்து மற்றும் தங்குமிடம் வழங்குவது உட்பட்ட குற்றங்களுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை, மற்றும் 1 மில்லியன் சவுதி ரியால்கள் ($260,000) வரை அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

0 Comments