தடுத்து வைக்கப்பட்டிருந்த அல் ஜஸீரா ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளா்கள் மூவரை விடுவிக்க எகிப்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.
குறித்த ஊடகவியலாளா்கள் மூவரையும் விடுவிக்குமாறு அல் ஜசீரா ஊடகம் பலமுறை எகிப்திய அதிகாரிகளை கேட்டு வந்தது.
எகிப்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஹிஷாம் அப்துல் அஸீஸ், பஹாவுதீன் இப்ராஹிம் மற்றும் ரபீ அல்-ஷேக், ஆகியோா் எவ்வித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாமல், விசாரணைகள் இல்லாமல் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ஹிஷாம் அப்துல் அஸீஸ் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தாா் , பஹாவுதீன் இப்ராஹிம் 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தாா் ,மற்றும் அல் ஷேக் 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டிருந்தாா்.
இவா்களின் கைதுகளுக்கு எதிராக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) குரலெழுப்பி வந்தது.
குறித்த ஊடகவியலாளா்கள் தடைசெய்யப்பட்ட குழுவின் உறுப்பினர்கள், மற்றும் தவறான தகவல்களை பரப்பியவா்கள் என்று எகிப்திய அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
அண்மைக்காலமாக கத்தாா் நாட்டுக்கும் எகிப்துக்கும் இடையில் ஏற்பட்டு வரும் நட்புறவின் காரணமாக இவா்களின் விடுதலை இடம்பெற்றிருக்கிறது.

0 Comments