Ticker

6/recent/ticker-posts

ஜொன்ஸ்டன், மஹிந்தானந்த விவகாரம்! ரணில் தரப்பும் மொட்டு அணியும் முரண்பாட்டில்..!


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 20 ஆகும்.  மேலும் 10 அமைச்சர்களுக்கான நியமனங்கள் இடம்பெறவிருக்கின்றன. 

மொட்டுக் கட்சியினால் அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள சில பெயர்களை ஜனாதிபதி ரணிலின் தரப்பினா் ஏற்காத காரணத்தினால் இந்த பத்து பேரின் நியமனம் நாளுக்கு நாள் தாமதமாகி வருகின்றது.

இந்த புதிய  அமைச்சரவையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, துமிந்த திஸாநாயக்க, ஏஎம்எல் அதாவுல்லா, நாமல் ராஜபக்ஷ உட்பட சுமார் 11 பெயர்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்ஷவின் பெயர் கடந்த வெள்ளிக்கிழமை அவரின் வேண்டுகோளின் போில் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அமைச்சரவையில் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சர்கள் நியமனம் தொடா்பாக பொதுமக்களிடம்  ஏற்பட்டுள்ள அதிருப்தியும் கோபமும் காரணமாக ஒரு சிலாின் பதவிப் பிரமாணத்தை இப்போதே செய்ய முடியாது என ரணில் விக்கிரமசிங்க தரப்பு கருதுகிறது. 

குறிப்பாக ஜோன்ஸ்டன் மற்றும் மகிந்தானந்தா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் பொதுமக்களிடம் பேசப்பட்டு வருவதால் அவர்களுக்கு தற்போது அமைச்சரவையில் பதவி வழங்க முடியாது எனவும் மேற்படி பட்டியலில் உள்ளவர்களை இரு பிரிவாக நியமித்து சத்தியப்பிரமாணம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் விரும்பாதவா்களை இரண்டாவது முறையாக  மக்கள் எதிர்ப்புகளை சமாளித்து செய்யலாம் என ரணிலின் தரப்பினா் கருதுகின்றனா். எவ்வாறாயினும், அனைத்து அமைச்சா்களும் ஒரே நிகழ்வில் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டியது அவசியம் என மொட்டுக் கட்சினா்  அடம்பிடித்து வருவதாகவும் அறிய வருகிறது..

இந்த  முரண்பாடுகளும், மோதல்களுமே புதிய அமைச்சா்களை தொிவு செய்வதில் இழுபறி நிலையை உருவாக்கியிருக்கிறது என  அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 


Post a Comment

0 Comments