Ticker

6/recent/ticker-posts

சக்விதி ரணசிங்கவுக்கு 22 வருட கடூழியச் சிறைத்தண்டனை!


இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி மக்களின் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் தொடுக்கப்பட்ட வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட சக்விதி ரணசிங்கவுக்கு நேற்று (14) கொழும்பு மேல் நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட  22 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீா்ப்பை வழங்கினாா். 

குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட பதினொரு குற்றச்சாட்டுகளையும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் வீதம் 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.2,75,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சக்வித்தி ரணசிங்கவின் மனைவிக்கும் 5 வருடங்களுக்கு  ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை மற்றும் 25,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.  

Post a Comment

0 Comments