கொழும்பு தேசிய மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அறிய வருகிறது. மருத்துவமனைக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்பவா்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைகள் அதிகம் இருப்பதால், விநியோகஸ்தா்கள் பொருட்களை விநியோகிப்திலிருந்து பின்வாங்கி வருகின்றனா்.
கடந்த பல மாதங்களாக மீன் விநியோகஸ்தர் நோயாளிகளின் உணவிற்கு மீன் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் எஸ். மெதவத்த குறிப்பிடுகிறார்.
சுகாதார அமைச்சு அந்த வழங்குனருக்கு 5 கோடி ரூபாவை செலுத்த வேண்டியிருப்பதால், குறித்த தொகை செலுத்தப்படும் வரை இந்த விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் நோயாளர்களுக்கு பல மாதங்களாக மீன்களுக்கு பதிலாக கருவாடு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சுக்கு பெருமளவு பணம் செலுத்த வேண்டியிருப்பதால் அரிசி வழங்குநர் அரிசி வழங்கத் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மெதவத்த தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 12ம் திகதி விநியோகஸ்தா்கள் அரிசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், உள்நோயாளிகளுக்கு காலை 11.30 மணிக்கு வழங்கப்பட வேண்டிய உணவு மதியம் 1.00 மணியளவில் வழங்கப்பட்டதாகவும், இதன் காரணமாக , அதிகளவான உணவை எறிய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அறிய வருகிறது.

0 Comments