ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு நகரமான இசியத்தில் (Izium) 440 க்கும் மேற்பட்ட உடல்கள் கொண்ட பாரிய புதைகுழியை உக்ரேனிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்று பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை (15) தெரிவித்தார். ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் .
ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் இவர்கள் கொல்லப்பட்ட்டுள்ளதாக கார்கிவ் பிராந்தியத்திற்கான தலைமை பொலிஸ் புலனாய்வாளர் செர்ஹி பொல்வினோவ் (Serhiy Bolvinov) தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சடலம் தொடர்பாகவும் தடயவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியதாக ஸ்கை நிவ்ஸ் ஊடகம் (Sky News) செய்தி வெளியிட்டுள்ளது.
"விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு பெரிய நகரத்தில் உள்ள மிகப்பெரிய புதைகுழிகளில் இதுவும் ஒன்று என்று என்னால் சொல்ல முடியும்... 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளன " என்று போல்வினோவ் கூறினார்.
"சிலர் பீரங்கித் தாக்குதலில் இறந்துள்ளனர்... சிலர் வான்வழித் தாக்குதல்களால் இறந்துள்ளனர்," என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் நகரமான இசியத்தை விட்டு வெளியேறின. உக்ரைனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ரஷ்யப் படைகள் அங்கு போர்க் குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் வருகின்றன.
"ரஷ்யா எல்லா இடங்களிலும் மரணத்தை விட்டுச் செல்கிறது, இந்த மரணங்களுக்கு ரஷ்யாவே பொறுப்பேற்க வேண்டும்" என்று உக்ரைன் ஜனாதிபதி விளாதிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.

0 Comments