Ticker

6/recent/ticker-posts

மீண்டும் எரிபொருள் நெருக்கடி வருமா?


டொலராக பணம் செலுத்த வேண்டிய நிலையில் மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கிட்டத்தட்ட 14 நாட்களாக தரித்திருப்பதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.

இந்த எரிபொருள் கப்பல்களுக்கு கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது மில்லியன் டொலர்கள் செலுத்த வேண்டியிருப்பதாக எாிசக்தி அமைச்சு அறிவித்திருக்கிறது. 

எண்ணெய் கூட்டுத்தாபனம்  மத்திய வங்கியுடன் இதற்கான பணத்தை பெற்றுக்கொள்வதற்காக  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

37,000 மெட்ரிக் டன் டீசலை ஏற்றி வந்துள்ள இரண்டு கப்பல்களும், 100,000 மெட்ரிக் டன் மசகு எண்ணெய்யை ஏற்றி வந்துள்ள ஒரு கப்பலும்  துறைமுகத்திற்கு அருகில் தரித்து நின்றுள்ளன.

Post a Comment

0 Comments