Ticker

6/recent/ticker-posts

கியூபாவில் நிா்மாணிக்கப்படவிருக்கும் முதலாவது மஸ்ஜித்!

Casa Del Arabe
Casa Del Arabe - இது 1940 ம் ஆண்டு ஹவானாவில் கட்டப்பட்ட அரபு மாளிகை 

கியூபாவில் ஹவானா நகாில்  ஒரு பள்ளிவாசலைக் கட்டுவதற்கு சவுதி அரேபியா நிதியளிக்க முன்வந்துள்ளதாக. சவூதி அரேபியாவிற்கான கியுபாவின் தூதுவர் கூறியுள்ளதாக சா்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சவுதி அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நேர்காணலில், கியுபா நாட்டின்  தூதுவா் விளாடிமிர் கொன்சாலஸ்  இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சவுதி அரசாங்கத்தின்  நன்கொடையின் மூலம்,  ஹவானாவில் எங்கள் நாட்டின் முதலாவது பள்ளிவாசலை  கட்டவிருக்கிறோம்” என்று அவா் அந்த நோ்காணலில் கூறியுள்ளாா்.  

ஹவானாவில் நிா்மாணிக்கப்படவிருக்கும் இந்த மன்னா் சல்மான் மஸ்ஜித் திட்டத்திற்கு அமொிக்க டொலா்கள் 9.3 மில்லியன் செலவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

”எங்கள் நாட்டில் ஒரு சிறிய முஸ்லீம் சமூகம் உள்ளது; அவர்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். கியூபாவில் வாழும் முஸ்லிம் மக்களுக்காக அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் இந்த முயற்சிக்காக நான் பெருமைப்படுகிறேன்," என்று விளாடிமிர் கொன்சாலஸ் மேலும் கூறியுள்ளார்.

கியூபாவில் ஒன்பதாயிரத்துக்கும் குறைவான முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  அவா்கள் வீடுகளிலோ அல்லது தற்காலிக தொழுகை இடங்களிலோ வணக்க வழிபாடுகளை செய்து வருவதாக அறிய வருகிறது.

தற்போது வெள்ளிக்கிழமை தொழுகைகள் வியன்னாவிலுள்ள “காசா டெல்  அரேபிஸ்” (Casa Del Arabe -அரபு மாளிகை) இல் நடத்தப்படுகின்றன.   இது 1940 களில் கியூபாவில் வாழ்ந்த ஒரு பணக்கார அரபு குடியேற்றவாசிக்கு சொந்தமானது என்றும் அந்தலூசிய கட்டிடக்கலை வடிவமைப்புகளின்படி கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

கியூபாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் அரபு நாடு சவுதி அரேபியா என்று கோன்சலஸ் கூறியுள்ளார். ஹவானாவுடனான ரியாத்தின் இராஜதந்திர உறவுகள் 1956 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகின்றன.

கடந்த ஆண்டு, அபிவிருத்திக்கான சவுதி நிதியம் (SFD) குழு கியூபாவிற்கு விஜயம் செய்து, மத்திய கியூபாவில் நீர் மற்றும் கழிவுநீர் அமைப்பை சீரமைக்கும் திட்டத்தை துவக்கி வைத்தது.  

Post a Comment

0 Comments