Ticker

6/recent/ticker-posts

“எங்களை பிச்சைக்காரா்களாக பாா்க்கிறாா்கள்” - பாகிஸ்தான் பிரதமா் கவலை!


பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக கூறியுள்ளார். நட்பு நாடுகள் கூட பாகிஸ்தானை  பணத்திற்காக பிச்சை எடுக்கும் ஒரு நாடாக பார்க்கத் தொடங்கியுள்ளன என்று அவா்  வருத்தம் தெரிவித்துள்ளார்.

"இன்று, நாங்கள் எந்தவொரு நட்பு நாட்டிற்கும் செல்லும்போது அல்லது தொலைபேசியில் பேசும்போது, ​​நாங்கள் பணம் பிச்சை எடுக்க வந்துள்ளோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்," என்று பாகிஸ்தான் பிரதமர் வழக்கறிஞர்களுக்கான மாநாட்டில் உரையாற்றும் போது கூறியதாக பாகிஸ்தானின் டோன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது. பிறகு பொருளாதார நெருக்கடியை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனாலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. சிறிய நாடுகள் கூட பொருளாதாரத்தில் எங்களை விஞ்சி விட்டது என்றும் அவா் வருத்தம் தொிவித்துள்ளாா்.


Post a Comment

0 Comments