Ticker

6/recent/ticker-posts

2014 ஊடகவியலாளர்களின் கொலை அதிகரித்த ஆண்டு

2014ம் ஆண்டு ஊடக துறையில் பணியாற்றிய போது உயிரிழந்த ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த ஆண்டாக குறிக்கப்பட்டிருக்கிறது.  இந்த தகவலை ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இவ்வாண்டு உலகளாவிய ரீதியில 60க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிரியாவிலே அதிகளவிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

Post a Comment

0 Comments