Ticker

6/recent/ticker-posts

இபோலா நோய் 7500 பேரை பலி கொண்டுள்ளது

“இபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லோன் ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. உயிர்க்கொல்லி நோயான இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த நோய் தாக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கடந்த 20–ந் தேதி வரை எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 7,512 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 19,340 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. சியர்ரா லோன் நாட்டில்தான் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு 2,556 பேர் இறந்துள்ளனர். லைபீரியாவில் 2,200 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் மாலியில் 6 பேரும், நைஜீரியாவில் 8 பேரும், அமெரிக்காவில் ஒருவரும் எபோலா நோய்க்கு பலியாகி உள்ளனர். தற்போது நைஜீரியா, ஸ்பெயின், செனேகல் எபோலா நோயில் இருந்து விடுபட்ட நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments