Ticker

6/recent/ticker-posts

தமக்கு பிரதமர் பதவியை தர உறுதியளிக்கப்பட்டதாக சரத் பொன்சேகா தெரிவிப்பு

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தாம் இராணுவத்தில் இருந்து விலக தீர்மானித்த போது தமக்கு பிரதம மந்திரி பதவி வழங்க உறுதியளிக்கப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனினும் அதனை தாம் நிராகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம், ஜனவரி 8ம் திகதியன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் வகையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக வெளியான தகவலை அடுத்து இன்று சரத் பொன்சேகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மஹிந்த அரசாங்கத்துடன் சேர பேச்சுவா்த்தை இடம்பெறுவதாக வெளியாகிய செய்தியை அவர் மறுத்துள்ளார். ஊழல் மிக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்க தாம் எண்ணம் கொண்டிருக்கவில்லை. இந்தநிலையில் தொடர்ந்தும் மைத்திரிபாலவை ஆதரிப்பதாக சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டாா். அத்துடன் சகல இராணுவ பதவி சாா்ந்த தரங்களில் இருந்தும்  நீக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments