Ticker

6/recent/ticker-posts

தபால் மூல வாக்களிப்பின் போது மிக மோசமான விதிமுறை மீறல்கள்; கபே குற்றச்சாட்டு

தபால் மூல வாக்கெடுப்பின் போது கடுமையான தேர்தல் விதிமீறல்கள் இடம்பெற்றதாகக் கபே முறைப்பாடு செய்துள்ளது. தபால் மூல வாக்கெடுப்பு கடந்த இரு நாட்களாக நடைபெற்றது.

இந்த நிலையில் தபால் மூல வாக்கெடுப்பு நடைபெற்ற நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அரச, தனியார் ஊடகங்களில் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது என கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை கடுமையான தேர்தல் விதி மீறலாகும். இது தொடர்பில்  தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 நேரடி ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் அல்லது வேறு ஓர் நாளில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தேர்தல் ஆணையாளரிடம் கோரப்பட்டது.

ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிப்பில் பங்கேற்கும் நேரத்தில் இவ்வாறு நேரடி ஒளிபரப்புச் செய்வது கடுமையான தேர்தல் விதி மீறலாகும்.
 தபால் மூல வாக்கெடுப்பு நடைபெறும் தினத்தில் அரச ,தனியார் ஊடகங்களில் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றிய விபரங்கள் நேரடியாக ஒளிபரப்புச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

மொனராகலை, பதுளை,  அம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தபால் மூல வாக்கெடுப்பு நடைபெறும் நிலையங்கள் மற்றும் அதற்கு வெளியே கடுமையான தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்றன.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையில்  459 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 2005 மற்றும்  2010 ஆம் ஆண்டுகளை விடவும் இம்முறை தேர்தலில் அதிகளவு வன்முறைகளும் விதிமீறல்களும் இடம்பெற்று வருவதாகவும் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/ciwo4wauni41732130eb640e15293ponkx0a272898a51da41363542dkuynj#sthash.cLijtZYB.dpuf

Post a Comment

0 Comments