திஸ்ஸ அத்தநாயக்கவினால் வெளியிடப்பட்ட இரகசிய ஒப்பந்தத்தை
பகிரங்கப்படுத்துமாறு கோரி அமைச்சர் விமல் வீரவன்சவின் தூணடுதலின் போில்
இன்று 24ம் திகதி சிரிகொத்த முன்னால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று
இடம்பெற்றிருப்பதாகவும், ஆா்ப்பாட்டக் காரர்கள் ஐ.தே.க. தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் , அதை எதிா்த்து ஐ.தே.க ஆதரவாளா்களும் திருப்பித் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் அறியவருகிறது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பலா் காயமுற்று இருப்பதாகவும், காயமுற்ற பலாில விமல் வீரசன்சவின் தேசிய சுதந்திர முன்னணி அங்கத்தவா்கள் பலா் இருப்பதாகவும் அறிய வருகிறது.
0 Comments