வடபகுதி மக்களை எவராவது அச்சறுத்தி வாக்களிக்காமல் செய்யும் பட்சத்தில் முழு தேர்தலும் இரத்துச்செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.
அவர் ஆங்கில பத்திரிகையொன்றிற்கு தெரிவித்துள்ளதாவது இராணுவத்தின் அராஜகம் காரணமாக வடபகுதி மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்க தயாராகின்றார்கள் என்பது குறித்த எந்த விபரங்களையும் வடமாகாணத்தின் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இதுவரை எனக்கு தெரியப்படுத்தவில்லை.
இராணுவம் மக்கள் வாக்களிப்பை தடுக்கும் எனவும் நான் கருதவில்லை,எனினும் வடபகுதி நிலைமை தென்பகுதியை விட வித்தியாசமானது என்பது எங்களுக்கு தெரியும்,
வெளிநாட்டவர்கள் தென்பகுதியில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்,ஆனால் வடக்கில் எனது உத்தியோகத்தர்கள் கூட படையினரிடம் அனுமதிபெறவேண்டும்.
நாட்டின் ஏனைய பகுதிகளை விட அதிகளவான இராணுவஆட்சி அங்கு காணப்படுகின்றது.
வடபகுதியில் மக்களை யாராவது மிரட்டி அச்சுறுத்தி வாக்களிக்கவிடாமல் செய்துள்ளமை தெரியவந்தால் முழு தேர்தலையும் இரத்துச்செய்துவிடுவேன். என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments