ஜனநாயகம் இல்லாமல் போவதையும், நாட்டில் சட்டமும் நீதியும் இல்லாமல் போவதையும் எண்ணியே மக்கள் அச்சம் கொள்ள வேண்டும். கவலை கொள்ள வேண்டும்.
அராஜகங்களிலிருந்து நாடு விடுபட இதுவே இறுதி சந்தர்ப்பம். உண்மை நிலையை உணர்ந்து நாம் ஓரணி திரள வேண்டும் என கோரிக்கை விடுத்தாா் பிரபல கலைஞா் கசுன் கல்ஹார.
மாயையிலிருந்து மீளுவோம் என்ற தலைப்பில் பிட்டகோட்டே சோலிஸ் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளா் சந்தி்ப்பின் போதே அவா் இவ்வாறு கூறினாா்.
தோ்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே உயர்கல்வி மாணவா்களின் மீது தாக்குதல் நடாத்தும் அரசாங்கம், தேர்தலில் வெற்றிபெற்றால் என்ன செய்வாா்கள் என்றும் கேள்வி எழுப்பினாா். இளம் கலைஞா்கள் அச்சமின்றி ஊர் ஊராய் சென்று இந்த ஆட்சியை மாற்றுவதற்கு மக்களைத் தெளிவூட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.
0 Comments