மைத்திரீபால சிரிசேனவின் ஊரான பொலன்னறுவைக்கு ஒன்பது இராணுவப் பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு, பொலன்னறுவை இராணுவத்தின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.க குற்றம் சாட்டியுள்ளது.
இது ஜனநாயத்திற்கு முரணாக தோ்தல் விதிகளை மீறுகின்ற செயலாகும் என ஐ.தே.க கண்டித்துள்ளது. மக்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஐ. தே.க மேலும் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக ஐ.தே.க யின் பாராளுமன்ற உறுப்பினா் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

0 Comments