Ticker

6/recent/ticker-posts

மஹியங்கனையில் புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்

மஹியங்கனையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு வாகனங்களில் வந்த சிலர் நேற்றிரவு 10 மணியளவில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் முன்னாள் இராணுவ கர்ணல் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
தாக்குதலில் குறித்த அரசியல் கட்சி அலுவலகத்திற்கும், வாகனங்கள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments