Ticker

6/recent/ticker-posts

இத்தாலி கப்பலில் தீ: 200 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

தீவிபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி கப்பலில் இருந்து 200பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மற்றவர்களை மீட்கும் பணியில் இத்தாலி மற்றும் கிரீஸ் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. கிரீஸில் இருந்து இத்தாலிக்கு 478 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த கப்பலின் அடித்தளத்தில் பிடித்த தீ மற்ற இடங்களுக்கும் பரவியது.



கப்பலில் தீ ஏற்பட்டதை அடுத்து கடலில் குதித்த கிரீஸைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலில் பரவிய தீயினால் ஏற்பட்ட புகைமூட்டத்தினால், பயணிகள் பலரும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருவதாகவும், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டவர்களில் சிலர் அருகிருக்கும் கப்பல்களுக்கு மாற்றப்பட்டதாகவும், அதிக பாதிப்பிற்குள்ளானவர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பு மற்றும் அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கிரீஸ் அமைச்சர் , அப்பகுதியில் அதிக கப்பல்கள் இருப்பதால், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Post a Comment

0 Comments