முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக 11 கோடி ரூபாய்கள் மதிப்புமிக்க தேர்தல் விளம்பரங்களை சுயாதீன தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பியதாக தெரியவந்துள்ளது.
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் தலைவர் அனுர சிரிவர்தனவின் அனுமதியின் பிரகாரமே இவை நடைபெற்றுள்ளன. அனுர சிரிவர்தன ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்த மறுநாளே தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறினார்.
இதேபோல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக்ஹவுஸ் போன்ற நிறுவனங்கள் மூலமாக சுமார் 100 கோடி ரூபாய்களுக்கு மேல் மதிப்புமிக்க மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் இலவசமாக ஒலி/ஒளி பரப்பப்பட்டும் பிரசுரிக்கப்பட்டும் உள்ளதாக அறியவருகிறது.
புதிய ஊடக அமைச்சராக பதவியேற்ற கயன்த கருணாதிலக நாளை(15) தனது அமைச்சில் கடமையை தொடர்ந்ததும் இச்சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க ஆணைக்குழுவொன்றை அமைத்து அதன் பிரகாரம் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Comments