Ticker

6/recent/ticker-posts

பண்டிகை காலத்தில் 660 வாகன சாரதிகள் கைது: பொலிஸ் தலைமையகம்

நாடளாவிய ரீதியில் பண்டிகை காலத்தின் போது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 660 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த 24-ம் திகதி முதல் 26-ம் திகதி வரையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல்
நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, 350 மோட்டார் சைக்கிள் சாரதிகளும், 227 முச்சக்கர வண்டி சாரதிகளும், 43 மோட்டார் வாகன சாரதிகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள பொலிஸ் தலைமையம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments