Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி தீர்மானம்?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பாராளுமன்றத்தை கலைப்பதன் மூலம், தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில் மைத்திரிபால சிறிசேனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதை தடுப்பதே ஜனாதிபதியின் நோக்கம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு தாவுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவார் என்ற உளவுத் தகவல்கள் ஜனாதிபதிக்கு கிட்டியுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments