Ticker

6/recent/ticker-posts

சோமாலியாவில் ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 7 வீரர்கள் பலி

ப்பிரிக்க நாடான சோமாலியா வில் அரசுக்கு எதிராக அல்–ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்கள்அல்–கைதா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு டையவர்கள்.சோமாலி யாவில் பைடோவா என்ற இடத்தில் ராணுவ தளம் உள்ளது. நேற்று காலை அங்கு அல்–ஷபாப் தீவிரவாதிகள் திடீரென அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர்.


பதிலுக்கு ராணுவ வீரர்களும் துப்பாக்கியால் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த தகவலை ராணுவ அதிகாரி கேப்டன் அகமது இடோவ் தெரிவித்தார். அதே வேளையில் துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

சில நாட்களுக்கு முன்பு அல்–ஷபாப் உளவு மற்றும் பாதுகாப்பு பிரிவு தலைவர் தக்லின் அப்தி ஷகூர் அமெரிக்க குண்டு வீச்சில் பலியானார். இதற்கு பழி வாங்கும் நோக்கில் இத்தாக்குதல் நடை பெற்றுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே 10 வீரர்களை கொன்று பாய்டோவா ராணுவ தளத்தை கைப்பற்றி விட்டதாக அல்–ஷபாப் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் ஷேக் அப்துல் யாசின் அபூ முசாப் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments