மக்களை நான் பிழையான வழியில் வழி நடத்தவில்லை. மக்களிடம் நான் வாக்கு கேட்கும் போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் மற்றும் காணமல் போனோர் தொடர்பில் மாகாண மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் ஆகியவற்றில் கதைப்பதற்கு அங்கீகாரம் தருமாறு கேட்டிருந்தேன்.
இதேநேரம் நான் குறித்த ஒருக்கு வாக்கைப் போடுமாறு கேட்பதே பிழை. நாங்கள் விலைபோகிறவர்கள் அல்ல. நான் என்னுடைய இன விடுதலைக்காக உயிரைக் கொடுப்பேனே ஒழிய ஒரு துரோகியாக உயிர் விடுகிற நிலைக்கு நான் மாறமாட்டேன் எனக் கூறியுள்ளார் வடமாகாண சபை அங்கத்தவா் அனந்தி சசிதரன். எதிரணி வேட்பாளருக்கு த.தே. கூட்டமைப்பு ஆதரவு தொிவிப்பதாக எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தொிவித்துள்ள அனந்தி தமிழ் அரசியல் வட்டத்தில் சா்ச்சைகை்குாியவராக மாறி வருகின்றாா்.
ஆசிரியையான அனந்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோண மலை மாவட்டமாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவி ஆவார். எழிலன் 2009 மே மாதத்தில் ஈழப்போா் முடிவடைந்ததை அடுத்து இலங்கை ஆயுதப் படையிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனார்.
இவர் சரணடைந்ததை இலங்கை அரசு மறுத்து வருகிறது ஆனாலும், தனது கணவர் இலங்கை அரசின் காவலில் இன்னமும் உள்ளார் என அனந்தி
நம்புகிறார், அவரது விடுதலைக்காக பரந்த அளவில் குரல் கொடுத்து வருகிறார். ஈழப்போரில் காணாமல் போனோர் மற்றும் விதவைகளின் குடும்பங்களுக்காக அனந்தி குரல் கொடுத்து வருகிறார்

0 Comments